பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள எம்.எஸ்.தோனி சர்வதேச பள்ளிக்கு அருகே நேற்று சிறுத்தைப்புலி காணப்பட்டதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அந்த பள்ளி பெற்றோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
"சிங்கசந்திரா பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று காணப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால் சமீபத்திய தகவலின்படி, அந்த சிறுத்தை வெகுதூரம் நகர்ந்து ஜிபி பாளையம் அருகே காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளோம்," என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
நேற்று இந்த சிறுத்தை எலக்ட்ரானிக் சிட்டி, AECS லேஅவுட், சிங்கசந்திரா போன்ற இடங்களில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
டிவ்ஜ்க
'மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்': வனத்துறை துணைப் பாதுகாவலர்
"எங்கள் பாதுகாப்புக் குழு மிகுந்த விழிப்புடன் உள்ளது. அப்பகுதியை உன்னிப்பாக நாங்கள் கண்காணித்து வருகிறோம். உங்கள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த மின்னஞ்சலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வனத்துறையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் பிரிவினர் அந்த சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
"மக்கள் பீதி அடையத் தேவையில்லை. நேற்றிரவு(சனிக்கிழமை) ஒரு குழுவை அங்கு அனுப்பியிருந்தோம். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ஒரு குழு அங்கு குவிக்கப்பட்டுள்ளது. சிறுத்தைப்புலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனினும், நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்று பெங்களூரு நகர்ப்புற வனத்துறை துணைப் பாதுகாவலர் என் ரவீந்திர குமார் கூறியுள்ளார்.