Loading...
தலைமைத் தேர்தல் ஆணையரின் மகள் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒதுக்கப்பட்ட விதம் குறித்து CJI-க்கு வழக்குரைஞர்கள் அமைப்பு கடிதம்
தலைமைத் தேர்தல் ஆணையரின் மகள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் கிளம்பிய சர்ச்சை

தலைமைத் தேர்தல் ஆணையரின் மகள் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒதுக்கப்பட்ட விதம் குறித்து CJI-க்கு வழக்குரைஞர்கள் அமைப்பு கடிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
12:59 pm

செய்தி முன்னோட்டம்

நொய்டா மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் பட்டியலிட்ட விதம் மற்றும் நேரலை விசாரணையின் போது ஒலி அமைப்பை முடக்கியமை குறித்து, இந்திய தலைமை நீதிபதி(CJI) சூர்யா காந்திற்கு அரசியலமைப்பு சட்டத்திற்கான வழக்கறிஞர்கள் சங்கம்(LAFC) சுட்டிக்காட்டிக் கடிதம் எழுதியுள்ளது. நொய்டாவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது, டெல்லி பல்கலைக்கழக மாணவியும் ஆர்வலருமான ஆகிருதி சௌத்ரி NSA கீழ் கைது செய்யப்பட்டார். இக்கைதை ரத்து செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஆட்சியர் மேதா ரூபம் உள்ளிட்ட அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

சர்ச்சை

அமர்வு சர்ச்சை

இவ்வுத்தரவை எதிர்த்து மேதா ரூபம் மேல்முறையீடு செய்தார்.

ஜூலை 13 முதல் அமலில் உள்ள வழக்கமான பட்டியலின்படி நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் இவ்வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என்.கோடீஸ்வர சிங் அமர்வுக்கு இவ்வழக்கு 'சிறப்பாக மாற்றப்பட்டு' விசாரணைக்கு வந்தது கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேதா ரூபம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாரின் மகள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர்கள் சங்கம், உயர் பதவியில் உள்ள பொது அதிகாரியின் குடும்பத்தினருக்கு இத்தகைய சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுவது நீதித்துறை மீதான நம்பிக்கையைக் குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற நேரலை விசாரணையின் போது, திடீரென ஆடியோ முடக்கப்பட்டதற்கும் அச்சங்கம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT