'குழந்தைத் தொழிலாளர்' குறித்த குஷ்பு பதிவிட்ட ட்வீட்; ட்ரோல் செய்யும் நெட்டிஸன்கள்
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, பாஜக கட்சியில் உள்ளார். அதோடு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறி சிக்கி கொள்வதுண்டு. அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுகிறேன் பேர்வழி என்று அவர் ஒரு ட்வீட்-ஐ எக்ஸ் தளத்தில் பதிவிட, அது அவருக்கே பூமராங் போல மாறிவிட்டது. சமீபத்தில் மும்பை சாலையில் செல்லும்போது, அங்கிருக்கும் 'சிறு குழந்தைகளிடமிருந்து' வாங்கிய பூக்களின் கொத்து புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். அந்த புகைப்படத்துடன் 'மக்களைச் சுயசார்புடையவர்களாக இருக்க பிரதமர் மோடி எப்படி ஊக்கப்படுத்தியுள்ளார்' என அவர் ஒரு கேப்ஷன் போட, அவரை இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குஷ்பூ ட்வீட்
வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்
மன்னிப்பு கேட்ட குஷ்பு
ஆரம்பத்தில் தன்னை நோக்கி வந்த ட்ரோல்களுக்கு பதிலளித்த குஷ்பு, இந்த பிரச்னை வேறு விதமாக மாறவே, தான் போட்டிருந்த டீவீட்டை நீக்கி விட்டார். தொடர்ந்து, இந்த விவகாரத்தில், குழந்தை தொழிலாளர் அம்சத்தை தான் கவனிக்காமல் இருந்தது, தன்னுடைய தவறுதான் எனவும், தனக்காகவோ அல்லது தனது குடும்பத்திற்காகவோ, எந்த குழந்தையும் தெருக்களில் இருக்கக் கூடாது என்றும் அவர் தற்போது கூறியுள்ளார். "தவறு என உணரும்பட்சத்தில், மன்னிப்பு கேட்பது தான் சிறந்த குணம். எனது நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல. தவறான செய்தியை தெரிவித்ததற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.இதுவரை எனது எந்த ட்வீட்களையும் நீக்கியதில்லை. ஆனால், இந்த ட்வீட்-ஐ நான் நீக்கி விடுகிறேன். தவறான முன்னுதாரணமாக ஆகிவிட கூடாது என்பதற்காக" என அவர் கூறினார்.