கிருஷ்ணகிரி சம்பவத்தில் கைதாகி சிறையில் இருந்த முக்கிய குற்றவாளி சிவராமன் திடீர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், போலி NCC கேம்ப் நடத்தி, மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் இன்று உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. பாலியல் வழக்கு, போலி NCC கேம்ப் நடத்தியதற்கான முறைகேடு வழக்கு என பல வழக்குகளின் கீழ் சிவராமன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போலி முகாம் நடத்திய வழக்கில் பள்ளியின் முதல்வர் சதீஸ் குமார் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.