கொல்கத்தா மருத்துவர் கொலை: 3 ஜூனியர் டாக்டர்களை பாலிகிராப் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடும் சிபிஐ
மூன்று ஜூனியர் டாக்டர்கள் உட்பட நான்கு ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பாலிகிராஃப் சோதனை நடத்தும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என இதன்மூலம் கண்டறியப்படும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை பயிற்சி மருத்துவர் ஒருவர் கல்லூரியின் வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் அவர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற போலீஸ் விசரணையில் சஞ்சய் ராய் என்ற குடிமைத் தொண்டர் குற்றவாளி என கூறப்படுகிறது.
யார் மீது சோதனை நடத்த திட்டம்?
குற்றவாளி சஞ்சய் ராய் தவிர மேலும் மூவருக்கு இந்த சோதனை நடத்த CBI திட்டமிட்டுள்ளது. சஞ்சய் ராய்க்கு ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு இது நடத்தப்படக்கூடும் எனக்கூறப்படுகிறது. இரண்டு முதலாம் ஆண்டு முதுகலை பயிற்சி மருத்துவர்களின் கைரேகைகள் கருத்தரங்கு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்களுக்கு பாலிகிராஃப் சோதனையை போலீசார் நடத்துவார்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல, ஒரு பயிற்சியாளரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார். பயிற்சி மருத்துவர் கருத்தரங்கு அறைக்குச் சென்று அவளுடன் உரையாடியதாக CCTV காட்சிகள் காட்டுகிறது. அதனால், அவரும் உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.