Page Loader
மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
மின் உயர்வினால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்

மின்கட்டண உயர்வு உங்களை பாதிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2024
12:22 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் கிட்டத்தட்ட 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பை தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வால் இலவசமாக தரப்படும் யூனிட்கள் ரத்தாகுமா? மின் உயர்வினால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் என்ன? புதிய மின் கட்டண உயர்வால், தமிழகத்தின் 2.47 கோடி மின்நுகர்வோரில், கிட்டத்தட்ட 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை. அதாவது, அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

தகவல்

நீங்கள் தெரிந்து கொள்ள மேலும் சில தகவல்கள்

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதிலிருந்து முழுவிலக்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இந்த புதிய மின்கட்டணத்தில், இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் மின்நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.5 வரை மட்டுமே உயரும். இதுவே இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 35லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு அதிச ரூ.15வரை மட்டுமே உயரும். 22.36 இலட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15 மட்டுமே உயரும்.