டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்': காலிஸ்தான் தீவிரவாதி பன்னுனின் புதிய மிரட்டல்
இந்தியா டுடே செய்திப்படி, காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தன்னைக் கொல்லும் சதி முறியடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 13 அல்லது அதற்கு முன், இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குவேன் என்று கூறியுள்ளார். 2001-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் 22-வது ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 13-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. அதே வீடியோவில், 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் சுவரொட்டி இடம்பெற்றிருந்தது. அதில், ' டெல்லி பனேகா காலிஸ்தான் ' (டெல்லி காலிஸ்தானாக மாறும்) என்ற தலைப்பிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் பன்னுன் கூட்டா?
பன்னூனின் மிரட்டல் வீடியோ வெளியானதையடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் உள்ளன. இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தி படி, பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐயின் கே-2 (காஷ்மீர்-காலிஸ்தான்) மேசை, இந்தியாவுக்கு எதிரான செய்திகளை பரப்புவதற்கான அவர்களின் நிகழ்ச்சி நிரலை, பன்னுனுக்கு வழங்கியதாக தெரிவித்தன. கடந்த மாதம், தி பைனான்சியல் டைம்ஸ், பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்க அதிகாரிகள், பண்ணுனைக் கொல்லும் சதித்திட்டத்தை முறியடித்ததாகவும், சதியில் இந்தியா ஏஜெண்டுகள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தது. பன்னூன், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட, இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த நீதிக்கான சீக்கியர்களின் (SFJ) தலைவர் ஆவார்.
பன்னுனின் கொலை சதி திட்டத்தில் நடந்தது என்ன?
அமெரிக்காவின் அறிக்கைபடி, 52 வயதான இந்திய வம்சாவளி நிகில் குப்தா, பன்னுனைக் கொல்லும் சதித்திட்டத்தில் இந்திய அரசு ஊழியருடன் இணைந்து பணியாற்றியதாக அமெரிக்க பெடரல் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். செக் குடியரசில், அதிகாரிகள் குப்தாவை கைது செய்து காவலில் வைத்துள்ளதாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள்காட்டி அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், "இந்தியாவில் மற்றும் பிற இடங்களில் குப்தா உட்பட மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய இந்திய அரசு ஊழியர் ஒருவர், அமெரிக்க மண்ணில் ஒரு வழக்கறிஞரையும், அரசியல் ரீதியாகவும் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். குப்தா, நியூயார்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற ஆர்வலர்".