Page Loader
நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு

நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு

எழுதியவர் Sindhuja SM
Jan 27, 2024
03:55 pm

செய்தி முன்னோட்டம்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்புக்கு(எஸ்எஃப்ஐ) இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ராஜ்பவனுக்கும் ஆளுநருக்கும் Z+ பாதுகாப்பை வழங்கியது. இன்று கொல்லத்தில் உள்ள நிலமேல் வழியாக ஆளுநர் ஆரிஃப் முகமது கானின் கான்வாய் சென்றபோது இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி காட்டினர். அதனால் கோபடைந்த ஆளுநர் கான், தனது வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோர மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனையடுத்து,அவருக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரள தலைநகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் ஆரிப் கானின் கான்வாய் இன்று நிறுத்தப்பட்டது.

ஜ்னவ்

காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆளுநர் போராட்டம்

அவருக்கு எதிராக கறுப்புக் கொடிகளை ஏந்தியும், கோஷம் எழுப்பியும், இந்திய மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தால் ஆத்திரமடைந்த ஆளுநர், காரில் இருந்து இறங்கி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்த ஆளுநர் கான், போராட்டங்கள் குறித்து முன்னரே தகவல் அளித்தும் அவர்கள் ஏன் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகலை பெற்றுக் கொள்ளும் வரை அங்கிருந்து செல்லமாட்டேன் என்று கவர்னர் கான் போலீசாரிடம் கூறியதால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த தர்ணா போராட்டம் நீடித்தது