பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்
கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார். அப்போது அவர் தங்கி இருந்த ஹோட்டலின் வாடகை நிலுவையில் இருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. அந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான நிலுவை கட்டணத்தை,'விருந்தோம்பல் கட்டணமாக' கர்நாடக அரசு செலுத்தும் என கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற முக்கியஸ்தர்கள் வரும்போது அவர்களுக்கு வரவேற்பது மாநில அரசின் மரபு. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்ததால், மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அந்த ப்ராஜெக்ட் டைகர்-ஐ திட்டமிடுவதில் மாநில அரசு ஈடுபடவில்லை எனத்தெரிவித்தார்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து மீதி பணம் வர வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மைருசு-பந்திப்பூரினை விஜயம் செய்ததார். அந்த நேரத்தில், MCC நடைமுறையில் இருந்தது. எனவே, இது முற்றிலும் மத்திய அரசின் திட்டமாகும். ஆரம்பத்தில், அவர்கள் சுமார் ரூ. 3 கோடி செலவழிக்க திட்டமிட்டனர், ஆனால் செய்யப்பட்ட செலவு சுமார் 6.33 கோடி. எனவே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து மீதி 3.3 கோடி வர வேண்டும்" எனத்தெரிவித்தார். ""மாநில அரசின் வனத்துறை அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஹோட்டல் கட்டணத்தை மாநில அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால், நாங்கள் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளோம். எனவே, எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.