போலீஸ் வாகனமாக பயன்படுத்தப்படும் பொலிரோ உண்மையில் பாதுகாப்பானதா? ஆனந்த் மஹிந்திரா நோக்கி கேள்விகள்
கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் 26 வயது தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ் பர்தன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் மஹிந்திரா பொலேரோவில் பயணித்ததாகவும், அந்த வாகனத்தின் டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் பொலிரோ வாகனங்களின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்துமாறு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை பெங்களூரு முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் உள்ளிட்ட பலர் கேள்விகள் கேட்டுள்ளனர்.
தகுதிகாண் IPS அதிகாரி பயணித்த பொலேரோவின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து
இந்த சம்பவம் நேற்று மாலை ஹசன்னில் நடந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள துாசர் என்ற கிராமத்தை சேர்ந்தவர், ஹர்ஷ் பர்தன். இவர் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்., பயிற்சியை, மைசூருவில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் 6 மாத மாவட்ட பயிற்சியை முடித்துள்ளார். இவருக்கு முதல் போஸ்ட்டிங்காக கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹொலேநராசிபூரில் ஏ.எஸ்.பி.,யாக பதவி அளிக்கப்பட்டது. பதவியேற்பதற்காக வந்த பர்தனின் கார் டயர் வெடித்ததால், காரை ஓட்டி வந்த மாவட்ட ஆயுதபடை கான்ஸ்டபிள் மஞ்சேகவுடா, நிலை தவறினார். இதனால் சாலையின் ஓரத்தில் இருந்த வீடு மற்றும் மரத்தின் மீது கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பர்தன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்திய காவல்துறை பயன்படுத்தும் வாகனமாக பொலிரோ அறியப்படுகிறது; பாதுகாப்பானதா?
ஒரு எக்ஸ் இடுகையில், முன்னாள் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ், "சாலையில் காவல்துறை இயக்கங்கள் எப்போதும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. தனது தொழிலைத் தொடங்கத் தயாராக இருந்த இளம் ஐபிஎஸ் அதிகாரியின் சோக மரணம் கடைசி மணியாக கேட்கிறது. இந்திய காவல்துறை மஹிந்திரா ஜீப்களை பெரிதும் நம்பியுள்ளது. பல ஆண்டுகளாக, பொலிரோ மேம்பட்டுள்ளது, ஆனால் அவசரகால பதில் வாகனம் எப்படி இருக்க வேண்டுமோ அதைவிட சாற்றி தரம் குறைவாகவே உள்ளது" என தெரிவித்துள்ளார். காவல்துறையினர் பயன்பாட்டிற்கு வரும் வாகனங்களில் மோசமான பாதுகாப்பு தரம் உள்ளது எனவும், சீட் பெல்ட்கள் இல்லை, எச்சரிக்கை, ஏர் பேக்குகள் இல்லை, மோதலை எதிர்க்கும் எச்சரிக்கை இல்லை போன்ற பல குறைபாடுகள் இருப்பதை அவரின் பதிவு சுட்டிக்காட்டியது.