
பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு
செய்தி முன்னோட்டம்
கர்நாடக பள்ளிகளின் 6-12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சில முக்கிய திருத்தங்களை செய்ய கர்நாடக அமைச்சரவை நேற்று(ஜூன் 15) ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மாற்றங்களை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மறு மதிப்பீடு செய்துள்ளது.
இந்தத் திருத்தங்கள் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் மற்றும் இந்துத்துவ சித்தாந்தவாதி வி.டி. சாவர்க்கர் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட இருக்கிறது.
சாவித்ரிபாய் பூலே, சக்ரவர்த்தி சுலிபெலே, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் பற்றிய நீக்கப்பட்ட பாடங்கள் மீண்டும் சேர்க்கப்பட உள்ளன.
கிண்ட்ஸ்க்
காங்கிரஸின் தேர்தல் வாக்குகுருதிகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டது
பாஜக ஆட்சியில் இருந்தபோது பள்ளி பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்வோம் என்றும் தேசிய கல்விக் கொள்கையை(NEP) ரத்து செய்வோம் என்றும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"பாடப்புத்தக திருத்தம் தொடர்பான முன்மொழிவு, நீக்கப்பட வேண்டிய பாடங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து அமைச்சரவை விவாதித்து, ஒப்புதல் அளித்துள்ளது" என, அமைச்சரவை கூட்டத்திற்கு பின், சட்டம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
பாடப் புத்தகங்களில் திருத்தை கொண்டுவருவது காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில் உள்ளது என்றும், இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா தொடர்ந்து தனது வழிகாட்டுதலை அளித்து வருகிறார் என்றும் தொடக்க/இடைநிலைக் கல்வி அமைச்சர் குமார் பங்காரப்பா கூறியுள்ளார்.