Loading...
கர்நாடக அரசியலில் திருப்பம்: தனக்கு எதிராக 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்த முயன்றதாக முதல்வர் டி.கே.சிவகுமார் பகீர் குற்றச்சாட்டு
தனக்கு எதிராக 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்த முயன்றதாக முதல்வர் டி.கே.சிவகுமார் பகீர் குற்றச்சாட்டு

கர்நாடக அரசியலில் திருப்பம்: தனக்கு எதிராக 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்த முயன்றதாக முதல்வர் டி.கே.சிவகுமார் பகீர் குற்றச்சாட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
06:33 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'ஸ்டிங் ஆபரேஷன்' விவகாரத்தில், தமக்கும், கேரள முதல்வர் வி.டி. சதீசனுக்கும் எதிராக ரகசிய பதிவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கன்னட செய்தி ஊடகமான ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் டி.கே.சிவகுமார் இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

மர்ம நபர்

மெட்டா ஸ்மார்ட் கண்ணாடியால் சிக்கிய மர்ம நபர்

மாநில முதல்வர்களைச் சந்திப்பதற்காக அதிகாரப்பூர்வ அனுமதி பெற்று வந்த தொழிலதிபர் ஒருவர், ஆரம்பத்தில் தொழில்ரீதியான விஷயங்களைப் பேசியுள்ளார்.

பின்னர் திடீரென பூத் லெவல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசத் தொடங்கியுள்ளார்.

அந்த நபர் அணிந்திருந்த சிறப்பு வகை கண்ணாடி மற்றும் பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம் டி.கே.சிவகுமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக அதிகாரிகளை கொண்டு அந்த நபர் குறித்து விசாரித்ததில், அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஒரு மத்திய அமைச்சரை சந்தித்தபோது அந்த கண்ணாடியை அணியவில்லை என்றும், ஆனால் தம்மையும் (டி.கே.எஸ்) கேரள முதல்வர் வி.டி. சதீசனையும் சந்தித்தபோது மட்டுமே அந்த மெட்டா கண்ணாடியை அணிந்திருந்ததும் டி.கே.சிவகுமாருக்கு தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டு மற்றும் தொடரும் அரசியல் களம்

பாஜக மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தலைவர்களைத் குறிவைக்காமல், காங்கிரஸ் தலைவர்களை மட்டுமே குறிவைத்து இத்தகைய ரகசியப் பதிவு முயற்சிகள் திட்டமிடப்பட்டு நடப்பதாக கூறியுள்ள டி.கே.சிவகுமார், இது குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் உரிய ஆதாரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையா தொடர்பான சர்ச்சைக்குரிய ஸ்டிங் வீடியோ விவகாரம் ஏற்கனவே கர்நாடக அரசியலில் தீப்பற்றியுள்ள நிலையில், டி.கே.சிவகுமாரின் இந்த புதிய குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT