Page Loader
கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 

கர்நாடகாவில் சாத்தானை ஓட்டுவதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர்; சிறுமியின் சகோதரனும் உடந்தையாக இருந்ததால் பரபரப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jun 03, 2024
07:55 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பேய் பிடித்ததற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர், கர்நாடகாவில் உள்ள ஒரு உள்ளூர் மசூதியில் பயிற்சி செய்து வந்திருக்கிறார். அதே மசூதியில் மூன்று ஆண்டுகளாக குர்ஆன் படிப்பில் பங்குபெற்று வந்த சிறுமி ஒருவருக்கு தான் இந்த அவலம் நடந்துள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, முதலில் அந்த மதபோதகர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார். பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாகவும், உடலுறவு அவளை குணப்படுத்தும் என்றும் அந்த சிறுமியின் சகோதரரை நம்ப வைத்தார்.

இந்தியா 

மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுமியின் தாய் 

மேலும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு சகோதரரை அவர் தூண்டி இருக்கிறார். அந்த மதபோதகரும் பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும், இந்த சம்பங்களை வீடியோவாகவும் அவர் படம் பிடித்திருக்கிறார். இது ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது. அந்த மதபோதகரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரரும் வாரத்திற்கு ஒரு முறை சிறுமியை பலாத்காரம் செய்திருக்கின்றனர். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாயிடம் விவரத்தை தெரிவித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.