Page Loader
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து

எழுதியவர் Srinath r
Oct 07, 2023
11:18 am

செய்தி முன்னோட்டம்

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இவரின் ஓட்டுநர் உரிமம் 6.10.2023 முதல் 5.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுகிறது. பிரபல யூடியூபரான வாசன் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வீலிங் செய்ய முயன்ற போது விபத்து ஏற்பட்டு கை முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் இவரை கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

2nd card

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை

சிறையில் அடைக்கப்பட்ட வாசன் ஜாமீன் கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நேற்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, டிடிஎஃப் வாசனின் யூடியூப் பக்கத்தை முடக்கி விட்டு, அவரின் இருசக்கர வாகனத்தை எரித்து விடலாம் என கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவரது ஓட்டுநர் உரிமம் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலரால் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டுபவருக்கு 10 ஆண்டுகள் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.