Loading...
'தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை': பெரியார் அறிவுலகப் போலி புத்தகங்களை எரிக்கக் கோரி கமல்ஹாசன் ஆவேசம்
பெரியார் அறிவுலகப் போலி புத்தகங்களை எரிக்கக் கோரி கமல்ஹாசன் ஆவேசம்

'தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை': பெரியார் அறிவுலகப் போலி புத்தகங்களை எரிக்கக் கோரி கமல்ஹாசன் ஆவேசம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
05:00 pm

செய்தி முன்னோட்டம்

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் பிரம்மாண்ட ஊழல் மற்றும் வரலாற்று தவறுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ள போலி நூல்களை உடனடியாக பறிமுதல் செய்து வீதியில் கொட்டி எரிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.

ஊழல்

சர்ச்சை பின்னணி: பெருமாள் முருகன் அம்பலப்படுத்திய ஊழல்

கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, அண்மையில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்குப் போலி பதிப்பகங்கள், போலி எழுத்தாளர்கள் மற்றும் வரலாற்றுத் தவறுகளுடன் ஆயிரக்கணக்கான நூல்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தினார்.

இச்சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த முதல்வர் விஜய், "ஊழலின் ஊற்றுக்கண் திமுக" என்று விமர்சித்திருந்தார்.

அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

"தமிழுக்குச் செய்த மாபெரும் துரோகம்": கமல்ஹாசன் அறிக்கை

பெரியார் அறிவுலக புத்தக ஊழல் குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்".

"இந்தப் போலி நூல்கள், அனைத்து அரசு நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடியில் ஈடுபட்ட போலிப் பதிப்பகங்கள் உடனடியாக சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT