நியூஸ் கிளிக்குடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களை சோதித்து வரும் டெல்லி போலீஸ்
செய்தி முன்னோட்டம்
சீனத் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இன்று சோதனை நடத்தியது.
டெல்லி, நொய்டா, காஜியாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவினர் பெரிய அளவில் சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின்(யுஏபிஏ) கீழ் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
சோதனையின் போது, மடிக்கணினிகள், மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைப்பற்றியது.
திலகவ்க்ன்
38.05 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை மோசடி
சந்தேக நபர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அமலாக்க இயக்குநரகம்(ED) டெல்லி போலீஸுக்கு தகவல் அளித்ததை அடுத்து, டெல்லி காவல்துறை இந்த சோதனையை நடத்தி வருகிறது.
ED நடத்திய விசாரணையில், நியூஸ் கிளிக் நிறுவனம் மூன்று வருடத்திற்குள் 38.05 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
ED ஆதாரங்களை ஆய்வு செய்ததில், எஃப்.டி.ஐ மூலம் ரூ.9.59 கோடியும், சேவைகள் ஏற்றுமதி மூலம் ரூ.28.46 கோடியும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரிய வகையில் வெளிப்படுத்தப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட பணம், கௌதம் நவ்லகா மற்றும் தீஸ்தா செதல்வாட்டின் உட்பட பல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு சீன தொடர்புகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.