Page Loader
தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது
ஜோத்பூர் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

எழுதியவர் Sindhuja SM
Apr 19, 2023
06:55 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சுற்றுலா வந்திருந்த தென் கொரிய யூடியூபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று ஒரு இந்தியர் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி-மாலிவால் உட்பட பல பயனர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். "ஜோத்பூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு கொரிய வலைப்பதிவாளர் பதிவிட்ட வீடியோவைப் பார்த்தேன். இது மிகவும் அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது. இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டின் பெருமையை கெடுக்கிறார்கள்." என்று சுவாதி மாலிவால் ட்விட்டரில் கூறியிருந்தார். இது குறித்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தெவித்திருந்தார். இந்நிலையில், ஜோத்பூர் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

சுவாதி மாலிவால் ட்விட்டரில் பதிவிட்டிருந்த வீடியோ