27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனஞ்சய் என பெயர்கொண்ட அந்த மாணவர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இடதுசாரி ஆதரவு குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு முன்னால், இடதுசாரிகளில் இருந்து தேர்வான பட்டி லால் பைர்வா என்ற மாணவர், 1996-97-இல் JNU -வின் மாணவரணி தலைவராக இருந்தார். மாணவர் தேர்தலில், அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தனஞ்சய் 2,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர், பீகார் மாநிலம் கயாவை பூர்விகமாக கொண்டவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அழகியல் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றவர்.