Page Loader
27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்
27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த குடும்பம்

27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 30, 2025
09:55 am

செய்தி முன்னோட்டம்

ஒரு ஜார்கண்ட் குடும்பம் பல ஆண்டுகளாக காணாமல் போன குடும்ப உறுப்பினரை தேடிவந்த நிலையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் வியக்கத்தக்க வகையில் இந்த தேடல் முடிந்தது. 1998ல் கானாமல் போன கங்காசாகர் யாதவ், தற்போது 65 வயதில் பாபா ராஜ்குமார் என்ற அகோரி துறவியாக வாழ்ந்து வருவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கங்காசாகர் அவரது மனைவி தன்வா தேவியையும் அவர்களது இரண்டு மகன்களையும் தனியாக விட்டுவிட்டு, பாட்னாவுக்குச் சென்றபின் காணாமல் போனார். பல வருடங்கள் தேடினாலும், கும்பமேளாவில் கலந்துகொண்ட உறவினர் ஒருவர் அவரைப் போன்ற ஒருவரைக் கண்டு புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வரை குடும்பத்தினர் நம்பிக்கை இழந்திருந்தனர். அவரை அடையாளம் கண்ட நிலையில், குடும்பத்தினர் உடனடியாக கும்பமேளாவுக்கு விரைந்தனர்.

மறுப்பு

பாபா ராஜ்குமார் அடையாளத்தை ஒப்புக்கொள்ள மறுப்பு

இருப்பினும், பாபா ராஜ்குமார் தனது கடந்த கால அடையாளத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால், மீண்டும் இணைவது எதிர்பாராத திருப்பத்தை எடுத்தது. அகோரி துறவியாக உடையணிந்து, அவர் வாரணாசியைச் சேர்ந்த ஒரு சாது என்று வலியுறுத்தினார், மேலும் தனது முந்தைய வாழ்க்கையுடன் எந்த தொடர்பையும் மறுத்தார். இருந்தபோதிலும், அவர் கங்காசாகர் என்பதற்கு சான்றாக அவரது குடும்பத்தினர் நெற்றியில் காயம் மற்றும் முழங்கால் வடு உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் கூற்றை உறுதிப்படுத்த உறுதியுடன், குடும்பம் கும்பமேளா காவல்துறையை அணுகி, டிஎன்ஏ பரிசோதனையை கோரியது. திருவிழா முடியும் வரை காத்திருப்பதாகவும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் காவல்துறை உறுதியளித்துள்ளனர்.