Loading...
ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் ஜஹாங்கீர் சரூரி உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளுக்கு ரூ.30 லட்சம் வெகுமதி அறிவிப்பு
3 பயங்கரவாதிகளுக்கு ரூ.30 லட்சம் வெகுமதி அறிவிப்பு

ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் ஜஹாங்கீர் சரூரி உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளுக்கு ரூ.30 லட்சம் வெகுமதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
06:09 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு -காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மறுநாளே, அவர்களை கொன்ற பயங்கரவாதிகளைப் பிடிக்க உள்ளூர் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய கமாண்டர் ஜஹாங்கீர் சரூரி உள்ளிட்ட 3 தேடப்படும் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.30 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முன்னதாக நேற்று, ராணுவ முகாம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தபோது மாயமான SoP-கள் உடல்கள், கிஷ்த்வார் மாவட்டத்தின் காட்டுப் பகுதியில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டபோது, அவர்களிடம் இருந்த சர்வீஸ் துப்பாக்கிகளும் மாயமாகியிருந்தது பயங்கரவாத தாக்குதலுக்கான சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

விவரம்

தேடப்படும் 3 பயங்கரவாதிகள் விவரம்

கிஷ்த்வார் காவல்துறையினர் வெளியிட்டுள்ள 'தேடப்படும் குற்றவாளிகள்' சுவரொட்டிகளில் முகமது அமீன் என்கிற ஜஹாங்கீர் சரூரி, ரியாஸ் அகமது என்கிற ஹசாரி மற்றும் முதசிர் ஹுசைன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

1990-களில் இருந்து செயல்பட்டு வரும் A++ பிரிவு பயங்கரவாதியான ஜஹாங்கீர் சரூரி, ஜம்மு - காஷ்மீரில் மிக நீண்ட காலமாக உயிருடன் தப்பித்து வரும் பயங்கரவாதியாகக் கருதப்படுகிறார்.

மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பிலிருந்து இவர் தப்பித்து வருகிறார்.

கிஷ்த்வார் மற்றும் தோடா பகுதிகளில் உள்ள உள்ளூர் ஆதரவாளர்கள் மூலமாகவே இவர் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

உச்சகட்ட பாதுகாப்பு

குல்காமில் 3-வது நாளாகத் தேடுதல் வேட்டை & பள்ளத்தாக்கில் உச்சகட்ட பாதுகாப்பு

மறுபுறம், தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டு 3-வது நாளாகத்** தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.

பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் மற்றும் பிற மாவட்டங்களில் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் திடீர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT