
இந்தியாவுக்கு வந்துள்ளார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்(என்எஸ்ஏ) ஜேக் சல்லிவன் இன்று டெல்லிக்கு வருகை தந்து கிரிட்டிகல் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜிஸ்(ஐசிஇடி) முயற்சியின் இரண்டாவது கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், சல்லிவன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும், பின்னர் பிரதமர் மோடியையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பைடனின் தலைமையிலான NSA இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் இருந்து ஒரு உயர்மட்ட தலைவர் இந்தியாவுக்கு வருவதும் இதுவே முதல் முறையாகும்.
இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், ஜூன் 5 அன்று மோடிக்கும் பைடனுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் போது சல்லிவனின் வருகை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியா
iCET முயற்சியின் ஒட்டுமொத்த முன்னேற்றம் பற்றி விவாதம்
அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
பின்னர், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், " இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய அதிபர் ஜோசப் ஆர் பைடன், இந்தியப் பொதுத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றதற்காக அவருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்." என்று கூறப்பட்டிருந்தது.
துணைச் செயலர் கர்ட் காம்பெல் உடன் இந்தியா வந்திருக்கும் சல்லிவன் லட்சிய iCET முயற்சியின் ஒட்டுமொத்த முன்னேற்றம் பற்றி விரிவாக விவாதிப்பார்.
iCET என்பது தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க அமெரிக்கா-இந்தியாவுக்கு இடையே போட்டுகொள்ளப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும்.