Page Loader
அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை, அபிராமி ராமநாதனிடம் சோதனை நிறைவு
அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் நாளையும் சோதனை தொடரலாம் என கூறப்படுகிறது

அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை, அபிராமி ராமநாதனிடம் சோதனை நிறைவு

எழுதியவர் Srinath r
Nov 06, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில், 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் அமைச்சருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை, அமைச்சர் மகனான எ.வ.வே கம்பன் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இதுவரை நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த எந்த தகவலையும், வருமானவரித்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோதனை நாளை வரை நீடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை இடமிருந்து ஒப்பந்தங்கள் பெற்றிருந்த காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

2nd card

கணக்கில் வராத ₹500 கோடி மதிப்பிலான ரசீதுகள் பறிமுதல்

காசா கிராண்ட் நிறுவனத்தில் 4வது நாளாக தொடர்ந்து வரும் சோதனையில், கணக்கில் வராத ₹500 கோடிக்கண ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும், ₹200 கோடிக்கான கணக்கில் வராத ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 3 நாட்களாக அபிராமி சினிமாஸ் நிறுவனரான, அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான இடங்களில் நடந்து வந்த சோதனையை அதிகாரிகள் நிறைவு செய்தனர். புரசைவாக்கத்தில் இருந்த அபிராமி மெகா மால் வேறொரு நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டது தொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.