Page Loader
சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 
சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது

சென்னையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கைது 

எழுதியவர் Nivetha P
Sep 06, 2023
04:42 pm

செய்தி முன்னோட்டம்

கேரளா திருச்சூரை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான சையது நபில் இன்று(செப்.,6) என்ஐஏ அதிகாரிகளால் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்துவந்த இவர் போலி ஆவணங்களை கொண்டு நேபாளம் செல்ல முயன்றப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சையது நபிலிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. அதன்படி அவர்கள் நடத்திய விசாரணையில், இவர்களின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கான நிதிகளை திரட்டுவது, பயங்கர தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிடுதல் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிவந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனிடருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கிறது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

அதிரடி கைது