ரயில் பயணிகள் கவனத்திற்கு! டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசம் குறைப்பு
ரயில் போக்குவரத்து, பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வழிமுறை ஆகும். நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் ட்ரெயின் மூலம் பயணம் செய்கின்றனர். ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு காலம், 120 நாட்கள் என்ற நடைமுறை இதுநாள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த கால அவகாசத்தை 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு நவம்பர் 1 முதல் அமலுக்கு வர இருப்பதாகவும், அதுவரை முந்தைய கால அவகாசமே செயல்படுவதாகவும், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான 365 நாட்கள் முன்பதிவு கால அவகாசத்தில் எந்த மாற்றமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.