Page Loader
அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை
அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை

அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை

எழுதியவர் Nivetha P
Nov 30, 2023
02:27 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த திமுக ஆட்சியில் தமிழக கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது அவர் தனது பதவி அதிகாரத்தினை பயன்படுத்தி தனது மகன் கௌதமன சிகாமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு முறைகேடான முறையில் செம்மண் குவாரி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் அவர்மீது எழுந்தது. மேலும் சட்டவிரோதமான முறையில் குவாரியிலிருந்து செம்மண் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு ரூ.28 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக இவர்மீது கடந்த 2012ம்.,ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை இவர்மீது வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை 17ம்.,தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

ஆஜர் 

அமைச்சருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை 

இந்த சோதனையில் வெளிநாட்டு பணம் உள்பட பொன்முடி மீதான ரூ.41.9 கோடி நிரந்தர தொகை வைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அன்று இரவே அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாலை வரை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சரிடம் அதிகாரிகள் கூறி அனுப்பிவைத்த நிலையில் தற்போது 4 மாதங்கள் கழித்து தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று(நவ.,30) சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் ஒருமணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.