NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது
    சம்பல் வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன

    சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 25, 2024
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

    முகலாயர் காலத்தில் இடிக்கப்பட்ட கோவில் இடத்தில் கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது கலவரம் வெடித்தது.

    இதன் எதிரொலியாக, அதிகாரிகள் பாதுகாப்பை பலப்படுத்தி, தடை உத்தரவு பிறப்பித்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியுள்ளனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    சட்ட நடவடிக்கை

    21 பேர் கலவரத்தின் எதிரொலியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

    கலவரத்தில் ஏற்பட்ட இரண்டு மரணங்கள், நாட்டுத் துப்பாக்கியால் ஏற்பட்ட காயங்கள் என்பதை மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேந்தர் பென்சியா உறுதிப்படுத்தினார்.

    மூன்றாவது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை மற்றும் பிரேத பரிசோதனைக்காக அறிக்கைக்காக காத்துள்ளதாக கூறப்படுகிறது.

    வன்முறைக்குப் பிறகு, காவல்துறை அதிகாரிகள் இரண்டு பெண்கள் உட்பட 21 பேரை தடுத்து வைத்து, சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    அறிக்கைகளின்படி, வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் பதிவு செய்யப்படுவார்கள்.

    தடை

    சம்பல் மாவட்டத்திற்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

    தனித்தனியாக, நவம்பர் 30 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ அனுமதியின்றி சம்பலுக்குள் நுழைவதை மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.

    இது இந்திய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம், 2023 இன் பிரிவு 163 இன் கீழ் செய்யப்பட்டது.

    அமைதியின்மை இருந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தல் மூலம் அதிகாரிகள் திட்டமிட்டபடி கணக்கெடுப்பை முடித்தனர்.

    நவம்பர் 29ம் தேதிக்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது.

    இச்சம்பவம் அனைத்து அரசியல் வட்டாரங்களில் இருந்தும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வன்முறை அதிகரித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கடுமையாக சாடியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    போராட்டம்
    கலவரம்
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உத்தரப்பிரதேசம்

    அரசியல்வாதியாக மாறிய ரவுடி முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்; யாரோ விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு இந்தியா
    வீடியோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவல் அதிகாரி  வைரல் செய்தி
    100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்  பல்கலைக்கழகம்
    "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வாசகத்தை மட்டும் எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற உத்தர பிரதேச மாணவர்கள்  இந்தியா

    போராட்டம்

    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்  மகாராஷ்டிரா
    'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை  தொழில்நுட்பம்
    சென்னையில் 8 மையங்களில் 24 மணிநேரமும் ஆவின் பால் விற்பனை ஆவின்
    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் திருச்சி

    கலவரம்

    மணிப்பூர் வன்முறை: தொடர்ந்து ஊரை விட்டு வெளியேறும் மக்கள்  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மணிப்பூர்

    காவல்துறை

    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  உத்தரப்பிரதேசம்
    200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது  டெல்லி
     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025