முற்றும் இந்தியா-கனடா பதற்றம்: விசா சேவைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான விசா சேவைகளை தாற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவிலுள்ள இந்தியா தூதரகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, கனடாவிற்கு பயணத்திட்டம் வைத்திருப்பவர்களும், அங்கிருந்து இந்தியா வர திட்டமிட்டவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சில முக்கிய கேள்விகளுக்கு இங்கே விடையளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் கனடாவில் உள்ள கனேடியராக இருந்தாலும், இந்தியாவிற்குப் பயணத்தைத் திட்டமிடுகிறவராக இருந்தாலும் அல்லது இரு நாட்டிலும் வசிக்கும் இந்தியக் குடிமகனாக இருந்தாலும், விசா சேவைகள், பயண அனுமதிகள் மற்றும் பலவற்றின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
விசா சேவைகள்: கேள்விகளும் பதில்களும்
இந்தியாவில் இருக்கும் இந்தியர்கள், கனடா செல்ல முடியுமா? தாராளமாக செல்லலாம். கனடாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு கனடா இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை. கனடாவில் இருந்து இந்தியாவிற்கு வேலை அல்லது வியாபாரம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுகிறார்களா?அவர்கள் ஏற்கனவே இந்திய விசா வைத்திருந்தால், அவர்கள் பயணம் செய்யலாம். எனினும் புதிதாக விண்ணப்பிக்க போகிறவர்கள் என்றால், இந்தியாவின் விசா விண்ணப்பக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விசா சேவைகள்: கேள்விகளும் பதில்களும்
செல்லுபடியாகும் இந்திய விசாக்கள் அல்லது இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டை உள்ளவர்கள் இந்தியாவிற்கு பயணிக்க முடியுமா? ஆம். செல்லுபடியாகும் விசா மற்றும் OCI உள்ளவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்யலாம் என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. கனடா தவிர, வெளிநாட்டில் வசிக்கும் கனேடியர் இந்திய விசாவிற்கு விண்ணப்பிக்க முடியுமா? இல்லை. கனேடிய குடிமகன், வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும், இந்திய விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என்று MEA வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
விசா சேவைகள்: கேள்விகளும் பதில்களும்
விசா இடைநிறுத்தம் இந்தியாவில் வசிக்கும் கனடியர்களை பாதிக்குமா? இல்லை. அவர்களின் தற்போதைய விசாக்கள் செல்லுபடியாகும். அவர்கள் தங்கள் விசா வகைகளை நிர்வகிக்கும் விதிகளின்படி தங்கள் விசாவை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். நான் கனேடிய பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இந்திய மாணவன். நான் பயணம் செய்யலாமா? தற்போதைய நிலவரப்படி, இந்தியர்கள் யாரும் கனடா செல்வதற்கு எந்தத் தடையும் அறிவிக்கப்படவில்லை. நான் கனடாவில் படிக்கும் இந்திய குடிமகன். நான் இந்தியாவிற்கு திரும்புவது சாத்தியமா? ஆம். இந்திய குடிமக்கள், மாணவர்கள் அல்லது கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்று MEA தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டும் இந்தியா
இதற்கிடையில், நிஜ்ஜாரின் மரணம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு எதிரான கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம் (MEA) முன்னதாக அவர்களை "உந்துதல்" மற்றும் "அபத்தமானது" என்று கூறியது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கனேடிய அரசாங்கத்திடம் இந்தியா ஆதாரம் கோரியுள்ளது. மேலும் கனடா பிரதமரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கும், இந்தியாவிற்கு எதிரான ஒட்டாவாவின் சகிப்புத்தன்மை குறித்தும் இந்தியாவின் முக்கிய கூட்டு நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.