Page Loader
வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1
1977இல் இந்திரா காந்தியின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது.

வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1

எழுதியவர் Sindhuja SM
Jun 10, 2023
07:00 am

செய்தி முன்னோட்டம்

வரலாற்று நிகழ்வு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சொந்த பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. சீக்கிய தீவிரவாதிகளான பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோர், பக்கத்து பங்களாவில் இருந்து தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த இந்திரா ​​காந்தியை சரமாரியாக சுட்டு கொன்றனர். இரண்டு தீவிரவாதிகளும் உடனடியாக சரணடைந்துவிட்டாலும், அவர்கள் இருவருமே அடுத்தடுத்த கைகலப்பில் சுடப்பட்டனர். பியாந்த் அங்கேயே உயிரிழந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்-நேரு, 1947வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பல்வேறு மத, இன மற்றும் கலாச்சார பிரிவுகளை ஒருங்கிணைந்த ஒரு தேசமாக உருவாக்க முயற்சித்தார். 1966இல் பிரதமரான அவரது மகள் இந்திரா காந்தியும் அதே பிரச்சனைகளைத் தான் எதிர்த்து போராடி கொண்டிருந்தார்.

details

1975இல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை இந்தியாவின் இருண்ட காலகட்டங்களில் ஒன்றாகும்

இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் இருந்தன. 1971இல் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு கீழ் பங்களாதேஷ் விடுதலைப் போர் நடந்தது. அதற்கு பிறகு தான், வங்காளதேசம் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது. 1971 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்திரா காந்தி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக, 1975இல் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான், அடல் பிஹாரி வாஜ்பாய், மொரார்ஜி தேசாய், பிஜு பட்நாயக், சந்திர சேகர் உட்பட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். 1977இல் இந்திரா காந்தியின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது. அதே ஆண்டு நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் இந்திரா காந்தி மோசமாக தோல்வியடைந்தார்.