Page Loader
கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை
'எம்வி ருயன்' கப்பலில் 18 பேர் கொண்ட பணியாளர்கள் குழு பணிபுரிந்து வந்தது.

கடற்கொள்ளையர்கள் கடத்திய மால்டா நாட்டுக் கப்பலை மீட்க விரைந்தது இந்திய கடற்படை

எழுதியவர் Sindhuja SM
Dec 16, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

அரபிக்கடலில் சோமாலியா கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டுக் கப்பல் கடத்தபடுவதாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்ததை அடுத்து, அங்கு நிலவும் சூழ்நிலையை இந்தியக் கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இதனையடுத்து, கடற்கொள்ளையர் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பல் உடனடியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அரபிக்கடலில் சிக்கியுள்ள மால்டா கப்பலான 'எம்வி ருயன்' என்ற சரக்கு கேரியர், டிசம்பர் 14ஆம் தேதி மாலை UKMTO போர்ட்டல் மூலமாக இந்திய கடற்படைக்கு ஒரு அவசர பேரிடர் செய்தியை அனுப்பியது.

டவ்கில்ஜி

2017ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் பெரிய கடற்கொள்ளை சம்பவம் 

அந்த செய்தியின் படி, 'எம்வி ருயன்' கப்பலில் 18 பேர் கொண்ட பணியாளர்கள் குழு பணிபுரிந்து வந்தது. ஆனால், திடீரென்று 6 அடையாளம் தெரியாத நபர்கள் அந்த கப்பலில் ஏறியதை அடுத்து, 'எம்வி ருயன்' பணியாளர்கள் இந்திய கடற்படைக்கு அவசர செய்தியை அனுப்பினர். அந்த செய்தியை பெற்ற இந்திய கடற்படை, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை ரோந்து விமானம் மற்றும் போர்க்கப்பலை உடனடியாக திருப்பி விட்டு, 'எம்வி ருயன்' கப்பலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஆனால், 'எம்வி ருயன்' கப்பலின் கட்டுப்பாட்டை கப்பல் பணியாளர்கள் ஏற்கனவே இழந்துவிட்டதாக இங்கிலாந்தின் கடல் வர்த்தக நடவடிக்கைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சோமாலிய கடற்கொள்ளையர்கள் நடத்தும் பெரிய தாக்குதல் இதுவாகும்.