NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா

    வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா

    எழுதியவர் Srinath r
    Dec 28, 2023
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    அரபிக் கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த 5 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற பல போராளி குழுக்கள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

    கடந்த வாரத்தின் இறுதியில், இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், இந்திய கடற்படை 5 அதிநவீன போர் கப்பல்களை அரபிக் கடலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    2nd card

    எந்தக் கப்பல் எங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது?

    இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் மோர்முகவோ, ஐஎன்எஸ் சென்னை மற்றும் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ஆகிய கப்பல்கள் அரபிக் கடல் பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஐஎன்எஸ் கொல்கத்தா செங்கடல் முகப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    ஐஎன்எஸ் கொச்சி ஏமன் சொகோத்ரா தீவுக்கு தெற்கேயும், ஐஎன்எஸ் மோர்முகவோ மேற்கு அரபிக் கடலிலும், ஐஎன்எஸ் சென்னை மத்திய அரபிக்கடலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

    ஐஎம்எஸ் விசாகப்பட்டினம் வடக்கு அரேபிய கடலில் ரோந்து பணிக்காக இரண்டு நாட்களுக்கு முன்னர், வர்த்தக கப்பல் தாக்குதலுக்குள்ளான போதே அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும், ராணுவ கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக, எம்வி ஸ்வர்ணமாலா என்ற 25,000 டன் எண்ணெய் டேங்க்கரை, இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.

    3rdcard

    வான் பரப்பிலிருந்தும் கண்காணிப்பு

    ஏவுகணை தாக்குதல், கடற்கொள்ளை ஆகியவற்றில் இருந்து இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பை வழங்கும் அதே சமயத்தில்,

    போயிங் பி 8 I மல்டி-மிஷன் விமானம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் சீ கார்டியன் ட்ரோன் ஆகியவை அரபிக் கடலின் ஏடன் வளைகுடா வரை, ஏமனின் ஷியா ஹூதிகள், ஈராக்கின் ஷியா கைதாப் ஹிஸ்புல்லா ஆகிய குழுக்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.

    பிரான்ஸ், பிரிட்டிஷ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்க கூட்டணி, செங்கடல் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரபிக் கடலில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா போர்க்கப்பலைகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    ஈரான்
    அமெரிக்கா
    பிரான்ஸ்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்திய ராணுவம்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்  இந்தியா
    மணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு இந்தியா

    ஈரான்

    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா
    கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான் அமெரிக்கா

    அமெரிக்கா

    ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம் ஹாலிவுட்
    கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம் உக்ரைன்

    பிரான்ஸ்

    கேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்  இந்தியா
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்
    நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்  உலகம்
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025