LOADING...
சென்னை ஏர்ஷோ 2024: உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என சாதனை
உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என சாதனை

சென்னை ஏர்ஷோ 2024: உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2024
01:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங், துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பல லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் முதல் பிரான்ஸிடமிருந்து வாங்கப்பட்ட அதிநவீன ரஃபேல் வரை பல்வேறு விமானங்கள் சாகசங்களை செய்து காட்டின. இதை காண 10 லட்சம் பேர் திரண்டதாகக் கூறப்படும் நிலையில், இது உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனை படைத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சாதனை

ட்விட்டர் அஞ்சல்

விமானப்படை வீரர்கள் சாகசம்

ட்விட்டர் அஞ்சல்

ரஃபேல் போர் விமானம்

ட்விட்டர் அஞ்சல்

ஹெலிகாப்டரில் சாகசம்