
கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா
செய்தி முன்னோட்டம்
கனடா- இந்தியா இடையே நிலவி வரும் இராஜதந்திர தகராறுகளின் தொடர்ச்சியாக இடைநிறுத்தப்பட்ட விசா சேவைகள், நாளை அக்டோபர் 26 முதல் மீண்டும் துவங்கும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் அனைத்து விசா சேவைகளும் தற்போது தொடங்கப்படவில்லை. மாறாக நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் மாநாட்டு விசாவுக்கான சேவைகள் மட்டும் மீண்டும் தொடங்கும் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
"சூழ்நிலையின் தொடர்ச்சியான மதிப்பீட்டின் அடிப்படையில், பொருத்தமான முடிவுகள் தெரிவிக்கப்படும்" என்று உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, கனடாவின் 41 இந்திய தூதர்களை, சென்ற வாரம் கனடா திரும்ப அழைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கனடா விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா
India resumes visa services in Canada for the following categories- Entry visa, Business visa, Medical visa and Conference visa: High Commission of India, Ottawa pic.twitter.com/amUGdXEUjp
— ANI (@ANI) October 25, 2023