
மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்திய இராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக 97 கூடுதல் தேஜாஸ் விமானங்கள் மற்றும் 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இவை இரண்டுமே உள்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கும் விமானங்கள் ஆகும். மேலும், இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு சுமார் ரூ.1.1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேஜாஸ் மார்க் 1-ஏ போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்காகவும், பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இராணுவத்திற்காகவும் வாங்கப்பட இருக்கிறது.
கூடுதலாக சில ஒப்பந்தங்களுக்கும் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதற்கான மொத்த மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் கோடியாகும்.
டவ்ட்ஜ்க்
விமானங்கள் எப்போது இராணுவத்தின் கையில் கிடைக்கும்?
இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டால், இந்திய வரலாற்றில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெற்ற மிகப்பெரிய ஆர்டராக இது இருக்கும்.
தற்போது போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. இதன்பிறகு, உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, எல்லாம் சரியாக வந்து, இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்.
அதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம். ஆனால், வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் ஒப்பந்தம் போட்டால் ஆகும் கால அளவை விட இது குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இறுதி விலை தீர்மானிக்கப்பட்டவுடன், பாதுகாப்பு அமைச்சரவை குழு கடைசி கையெழுத்தை போட்டு இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யும்.
எனவே, இந்த ஒப்பந்தம் முடிந்து விமானங்கள் தயாரிக்க குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.