
சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர்
செய்தி முன்னோட்டம்
ஆபரேஷன் சிந்தூரை வலுவாக ஆதரித்து பேசிய அமெரிக்க நகர்ப்புற போர் நிபுணர் ஒருவர் கூறுகையில், இந்தியா தனது தாக்குதல் மற்றும் தற்காப்பு மேன்மையை நிரூபித்ததுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "பாகிஸ்தானில் எங்கும், எந்த நேரத்திலும் இந்தியாவால் தாக்க முடியும் என்ற செய்தியை அந்த நாடு தெளிவாக அனுப்பியது" என்றார்.
இந்தியா டுடேக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், கர்னல் (ஓய்வு) ஜான் ஸ்பென்சர், பாகிஸ்தானால் பயன்படுத்தப்படும் சீன வான் பாதுகாப்பு அமைப்புகள், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு இணையாக இல்லை என்றார். போர்க்காலத்தில் துல்லியமாக எதிரிகளின் இராணுவத் தளங்களைத் தாக்க இவை பயன்படுத்தப்பட்டன.
பிரம்மோஸ்
சீனாவின் வான் பாதுகாப்புகளை தகர்த்தெறிந்த பிரம்மோஸ்
மாடர்ன் வார் இன்ஸ்டிடியூட்டில் நகர்ப்புற போர் ஆய்வுகளின் தலைவராக பணியாற்றும் ஸ்பென்சர், பாகிஸ்தான் பயன்படுத்தும் சீன வான் பாதுகாப்புகளை ஊடுருவிச் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணையின் திறன், இந்தியாவின் மேம்பட்ட இராணுவத் திறன்களுக்கு ஒரு சான்றாகும் என்று வலியுறுத்தினார்.
"சீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் இந்தியாவின் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது தரமற்றவை. இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, சீன மற்றும் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவ முடிந்தது. இந்தியாவின் செய்தி தெளிவாக இருந்தது. அது பாகிஸ்தானில் எங்கும் எந்த நேரத்திலும் தாக்கக்கூடும்" என்று கூறினார்.
மே 10 அன்று இஸ்லாமாபாத், இந்திய இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தானின் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் 11 விமானத் தளங்களைத் தாக்கியது