வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2
செய்தி முன்னோட்டம்
வரலாற்று நிகழ்வு: இந்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தால் இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா முழங்கினார்.
இதற்கு பெரும் இஸ்லாமிய ஆதரவும் இருந்தது.
1940களில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திய காந்தியும் நேருவும் அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில் ஜின்னாவின் புகழ் நாடெங்கும் பரவியது. 1945-46 தேர்தலில் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது.
ஜின்னா ஒரு மாபெரும் தலைவராக உருவெடுத்தார்.
பிரித்து ஆளும் அரசியலை இந்தியாவில் தொடங்கி வைத்த பிரிட்டிஷ் அரசாங்கமும் ஜின்னாவின் தனி நாடு கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியது.
இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் சிறுசிறு பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும் என்று ஜின்னா கோரினர்.
பிசகித்து
ரத்த கறையால் வரையப்பட்ட இந்திய-பாகிஸ்தான் எல்லை
ஆனால், இஸ்லாமிய மக்கள் நாடெங்கும் பரவி இருந்தனர்.
அதனால், இந்த கோரிக்கையை மறுத்த பிரிட்டிஷ் அரசாங்கம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா என்ற இரு பகுதிகளை மட்டும் பிரித்தது.
அதுவரை, மத அடிப்படையில் மக்கள் பிரிந்து வாழாததால், இந்துக்களும் இஸலாமியர்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து இருந்தனர்.
திடீரென்று நாடு பிரிகிறது என்பதால், பாகிஸ்தானில் இருந்த இந்துக்களும் இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்களும் பயத்தில் புலம்பெயர்ந்தனர்.
இந்த மாபெரும் புலம்பெயர்வு நடந்த போது, சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் மதக்கலவரம் வெடித்தது. சாதாரணமாக கொலைகள் நடந்தன.
இந்த சமயத்தில், 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 75,000 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
அதனால் தான் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோடு அப்பாவி மக்களின் ரத்தத்தால் வரையப்பட்டது என்று வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள்.