வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1
வரலாற்று நிகழ்வு: 76-ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தை 300-ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரிட்டிஷ் பேரரசு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனி நாடுகளாக பிரித்து சுதந்திரம் வழங்கியது. அந்த சமயத்தில் 'கிழக்கு பாகிஸ்தான்' என்ற பகுதியும் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த 'கிழக்கு பாகிஸ்தான்', 1971இல் வங்காளதேசம்(Bangladesh) என்ற தனி நாடாக பிரிந்தது. ஆனால், இந்த நாடுகள் ஏன் பிரிக்கப்பட்டன தெரியுமா? அதற்கு முக்கிய காரணமாக இருந்தது மதப்பிரிவினைகள் தான். மதங்களால் ஏற்பட்ட பிரிவினைகள் அல்ல, மத-அரசியலால் ஏற்பட்ட பிரிவினைகள்! 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சிகள் வெடித்தன. இதன் விளைவாக அகில இந்திய காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் உருவாகின.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் தோற்றம்
காங்கிரஸ் கட்சியை நேரு வழிநடத்தினார். இந்த கட்சியில் பெரும்பாலும் ஆதிக்க சாதி இந்துக்கள் மட்டுமே இருந்தனர். முகமது அலி ஜின்னா, முஸ்லீம்-லீக் கட்சியில் முக்கிய பங்காற்றினார். இவர் முஸ்லீம் லீக்கில் சேர்ந்த பிறகு இவருக்கும் மகாத்மா காந்தி ஆதரவர்களான காங்கிரஸுக்கும் சரியாக ஒத்துப்போகவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கான நலன்கள் சரியாக கவனிக்கப்படவில்லை என்ற குற்றசாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்த போது, ஜின்னாவால் முன்மொழியப்பட்டது தான் இஸ்லாமியர்களுக்கான ஒரு தனி தேசம். இந்த தேசத்திற்கு 'பாகிஸ்தான்' என்று பெயரிட்டவர் பிரபல இஸ்லாமிய தலைவர் ரஹ்மத்-அலி.