'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
காலியாக உள்ள சட்டமன்ற இடங்களை நிரப்புவதற்காக இன்று ஆறு மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் தங்களது மெகா மோதலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன.
இந்த 6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரபிரதேசத்தின் கோசி, மேற்கு வங்கத்தின் துப்குரி, கேரளாவின் புதுப்பள்ளி, உத்தரகண்டின் பாகேஷ்வர், ஜார்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 7 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் செப்டம்பர் 8ஆம் தேதி எண்ணப்படும்.
எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி(INDIA) உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
டான்வ்
51 ஆண்டுகளாக தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற உம்மன் சாண்டி
INDIA கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பல்வேறு கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையிலும், தாங்கள் "முடிந்தவரை ஒன்றாக" தேர்தலில் போட்டியிடுவோம் என்று சமீபத்தில் நடந்த மும்பை சந்திப்பில் எதிர்க்கட்சிகள் கூறி இருந்தன.
துப்குரி, புதுப்பள்ளி, பாகேஷ்வர், டும்ரி மற்றும் போக்சநகர் ஆகிய தொகுதிகளில் பதவியில் இருந்த எம்எல்ஏக்களின் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
கோசி மற்றும் தன்பூர் தொகுதிகளில் பதவியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது புதிய தேர்தல்களுக்கு வழிவகுத்தது.
உம்மன்-சாண்டியின் மறைவையடுத்து கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் சிபிஎம் கட்சியின் ஜெய்க்.சி.தாமஸை எதிர்த்து உம்மன்-சாண்டியின் மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
புதுப்பள்ளி தொகுதியில் 51 ஆண்டுகளாக உம்மன் சாண்டி மட்டுமே வென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.