
வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்
செய்தி முன்னோட்டம்
வடஇந்தியா முழுவதும் கடுமையான கனமழை பெய்து வருவதால் டெல்லி, ஹரியானா, ஹரித்வார் போன்ற முக்கிய நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அங்குள்ள நதிகளின் நீர் மட்டம் அபாயகட்டத்தை தாண்டி உயர்ந்து வருகிறது.
தலைநகர் டெல்லியில், யமுனா நதியின் நீர், பாலத்தையும் தாண்டி, முக்கிய சாலைகளில் ஓடி வருவதால், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், ஆற்றங்கரையில் உள்ள மக்கள் உடனடியாக அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு போகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கால், வீடுகள் மற்றும் சந்தைகளுக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது. இதனால், குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஹரியானாவில் வெள்ளநீர், துணை முதல்வர் அனில் விஜ் வீட்டிற்குள் புகுந்துள்ளது.
வெள்ள பாதிப்பு குறித்து அந்தந்த மாநில முதல்வர்கள் அவசர ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர்
#WATCH | Haryana Home Minister Anil Vij's residence in Ambala flooded following incessant rainfall in the state. pic.twitter.com/N815lda0Ex
— ANI (@ANI) July 12, 2023