LOADING...
நாளை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2025
09:00 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வரும் நாளை வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பாரிமுனை பகுதியில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை கொளத்தூரில் தலா 9செ.மீ., திருவள்ளூரின் பொன்னேரி பகுதியில் 8செ.மீ., பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கத்தில் தலா 7செ.மீ. மழை பெய்துள்ளது. தென் மாநிலங்கள் மீது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

மழை

நாளை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக IMD கணிப்பு

நாளை முதல் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும், குறிப்பாக வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மழை அதிகமாகப் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.