
தமிழகத்தில் ஏப்ரல் 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் இன்று முதல் வரும் ஏப்ரல் 23 வரை மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து IMD வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19 வரை, சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°C வரை உயரக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை இருக்கலாம் எனவும் நகரின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36°C மற்றும் குறைந்தபட்சம் 28°C வரை இருக்கலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 17, 2025
தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuULiL pic.twitter.com/9NKBlebpWQ