LOADING...
இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
இன்று இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்

இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2025
08:00 am

செய்தி முன்னோட்டம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8 மணி முதல் 24 மணி நேரத்திற்குள், மேகவெடிப்பு காரணமாக சென்னை மணலி உள்ளிட்ட மூன்று இடங்களில் 27 செ.மீ. அளவுக்கு கனமழை பதிவாகியுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 37 இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது. இன்று, மேற்குத் திசை காற்று வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, தமிழகம் முழுவதும் மழை தொடரும் வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை

தமிழகத்தில் வெப்பநிலை உயரக்கூடும்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை சாதாரணத்தைவிட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்கள் வரை மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.