Page Loader
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக காட்டுப் பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்

எழுதியவர் Srinath r
Oct 01, 2023
05:24 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய பிரதேச தலைநகர் கோபாலில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த ஆறு நபர்களும் நலமாக உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் III ஹெச்யூ யூனிட்டுக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் போபாலில் இருந்து ஜான்சி செல்லும் வழியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து போபாலில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள துங்காரியா கிராமத்தின் காட்டுப் பகுதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று காலை 8:45 மணியளவில் நடைபெற்றது. ஹெலிகாப்டரில் பயணித்த ஒரு பைலட் மற்றும் 5 வீரர்கள் நலமாக உள்ளதாக பெராசியா காவல் நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்