26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டது
செய்தி முன்னோட்டம்
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான 26 எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு 'I-N-D-I-A' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி(UPA) என்று அழைக்கப்பட்டு வந்ததது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை எதிராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் தற்போது இந்த கூட்டணியுடன் சேர்ந்துள்ளது.
அதை தொடர்ந்து, இன்று பெங்களூரில் நடந்த மாபெரும் கூட்டத்தில், இந்த புதிய 26 எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி(I-N-D-I-A) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் டெரெக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில் "Chak De! INDIA"(ஜெயிப்போம்! INDIA) என்று பதிவிட்டுள்ளார்.
கஜசவ்
மோடி VS INDIA: புதிய பெயரை தேர்வு செய்த ராகுல் காந்தி
இரண்டு நாட்களாக பெங்களூரில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நடந்த பெரும் ஆலோசனைக்குப் பிறகு இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சிகள் 'கூட்டணி' என்ற வார்த்தையை 'முன்னணி' என்று மாற்ற விரும்பியதாக கூறப்படுகிறது.
சிவசேனா UBT தலைவர் உத்தவ் தாக்கரே, 'எதிர்க்கட்சி' என்ற வார்த்தை கூட்டணி பெயரில் இருக்கக்கூடாது என்று பேசி இருக்கிறார்.
இறுதியாக, ராகுல் காந்தி தான் I-N-D-I-A என்ற பெயரை முன்மொழிந்தார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜிதேந்திர அஹ்வாத் ட்வீட் செய்துள்ளார்.
"அவரது படைப்பாற்றல் பெரிதும் பாராட்டப்பட்டது," என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில், வரும் 2024 பொது தேர்தலில் "மோடியா INDIAவா" என்பதை பார்த்துவிடலாம் என்று பல எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.