LOADING...
நானும் அதிபர் டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்: டிரம்ப் பதிவிற்கு பிரதமர் பதில்
பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப்பின் பதிவிற்கு பதிலளித்துள்ளார்

நானும் அதிபர் டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்: டிரம்ப் பதிவிற்கு பிரதமர் பதில்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2025
08:09 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப்பின் பதிவிற்கு பதிலளித்துள்ளார். முன்னதாக புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி எனது "அன்பான நண்பர்" என்று வர்ணித்து, தடைபட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விரைவில் இரு நாட்டிற்கும் சாதகமான முடிவு எடுக்கப்படும் என நம்புவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமரச தொனியில் பதிவிட்டிருந்தார். அதற்கு பிரதமர் மோடி X-இல் பதிலிலளித்துள்ளார். "இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயற்கையான பங்காளிகள்" என்று எழுதினார். "எங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைகள் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையின் வரம்பற்ற திறனைத் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த விவாதங்களை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன."எனக்கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post