NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹைதராபாதில் கொடூரம்: மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி சமைத்த முன்னாள் ராணுவ அதிகாரி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹைதராபாதில் கொடூரம்: மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி சமைத்த முன்னாள் ராணுவ அதிகாரி
    கடந்த ஜனவரி 18-ம் தேதி மீர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த குற்றம் தெரியவந்தது

    ஹைதராபாதில் கொடூரம்: மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி சமைத்த முன்னாள் ராணுவ அதிகாரி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 23, 2025
    03:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான குருமூர்த்தி என்பவரை தனது மனைவி புட்டவெங்கடா மாதவியை கொலை செய்து, அவரது உடலை துண்டாக்கி, கொதிக்க வைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மாதவியின் பெற்றோர், மாதவியின் இருப்பிடம் குறித்து குருமூர்த்தியிடம் விசாரித்ததில் காணாமல் போனதாக கூறப்படவே, கடந்த ஜனவரி 18-ம் தேதி மீர்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த குற்றம் தெரியவந்தது.

    தெலுங்கானாவில் பாதுகாப்பு நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரியும் குருமூர்த்தி, ஆரம்பக்கட்ட விசரணையில் மாதவி வாக்குவாதத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறி விசாரணை அதிகாரிகளை திசை திருப்ப முயன்றுள்ளார்.

    வாக்குமூலம் விவரங்கள்

    சந்தேக நபர் காவல்துறையினரின் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்

    குருமூர்த்தியிடம், நந்தியாலில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என மாதவி கூறியபோது, ​​ஆத்திரத்தில் மனைவியைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

    TOI படி, போலீஸ் ஆதாரங்களை மேற்கோள் காட்டி, குருமூர்த்தி அவர்களின் குளியலறையில் மாதவியின் உடலைத் துண்டித்து, பிரஷர் குக்கரைப் பயன்படுத்தி பாகங்களை வேகவைத்தார்.

    பின்னர் அவர் எலும்புகளை ஒரு அரவையில் அரைத்து, அவற்றை மீண்டும் கொதிக்கவைத்து, ஜிலேலகுடா அருகே உள்ள சாந்தன் ஏரியில் எச்சங்களை அப்புறப்படுத்தியுள்ளார்.

    குற்றம் நடந்த இடம்

    வழக்கு இன்னும் 'காணாமல் போன வழக்கு'

    திருமணமாகி சுமார் 13 வருடங்கள் ஆன இந்த தம்பதியினர் ஹைதராபாத்தில் உள்ள ஜிலேலகுடா பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

    சந்தன் ஏரியில் இருந்து மாதவியின் உடலை போலீசார் இன்னும் மீட்கவில்லை.

    தேடுதலுக்கு உதவுவதற்காக, ஒரு நாய்ப் படை மற்றும் துப்புக் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    குருமூர்த்தியின் வாக்குமூலம் இருந்தபோதிலும், கொலைக்கான ஆதாரம் கிடைக்கும் வரை இந்த வழக்கு இன்னும் "காணாமல் போன வழக்கு" என்று கருதப்படுவதாக மீர்பேட்டை எஸ்ஹோ கே நாகராஜு கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்
    கொலை

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    ஹைதராபாத்

    5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம்: ஹைதராபாத்தில் இன்று உயர்மட்ட கூட்டம்  தெலுங்கானா
    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா
    தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்? லியோ
    நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை, நடிகர் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன் ஆந்திரா

    கொலை

    பெங்களூரு பிஜியில் வைத்து பெண்ணைக் கொலை செய்த நபர் மத்தியப் பிரதேசத்தில் கைது  பெங்களூர்
    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு சென்னை
    திருமணம் குறித்து கேலி செய்ததால் விரக்தியில் அண்டை வீட்டாரை கொலை செய்த நபர் இந்தோனேசியா
    ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு  ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025