விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்?
செய்தி முன்னோட்டம்
இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து போராட்டத்தை துவங்க உள்ளனர்.
'டெல்லி சலோ' போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்துள்ளதால், 2020-ம் ஆண்டு போலல்லாமல் அவர்களை டெல்லிக்கு வர அனுமதிக்காத வகையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு நடந்த விவசாயி தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான கடைசிசுற்று பேச்சுவார்த்தை தோல்விடைந்த காரணத்தால், விவசாயிகள் போராட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் குறித்த தெளிவு இல்லை என விவசாயத் தலைவர்கள் தெரிவித்தனர்.
மறுபுறம், விவசாயிகள் எழுப்பிய பெரும்பாலான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், மீதமுள்ளவற்றைத் தீர்க்க ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
டெல்லி சலோ
2020-இல் நடந்த போராட்டத்திற்கும், இன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இருக்கும் வேறுபாடுகள்
2020ல், மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தினர். அச்சட்டங்கள், 2021ல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2020-21 போராட்டத்தின் போது அனைத்து பயிர்களுக்கும் MSPக்கு சட்ட உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் ஃபார்முலா, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான், தற்போது டெல்லி சலோ போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை சம்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை டெல்லி சலோவை அறிவித்துள்ளன.
2020 விவசாயிகளின் போராட்டத்தை, பாரதிய கிசான் யூனியன், சம்யுக்த் கிசான் மோர்ச்சா போன்றவை வழிநடத்தின சென்ற போராட்டத்தை முன்னின்று நடத்திய ராகேஷ் டிகாயிட், குர்னாம் சிங் சாருனி ஆகியோர் இந்த டெல்லி சலோவில் கலந்துகொள்ளவில்லை.