Page Loader
பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்
இருவரும், நீலாங்கரை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 01, 2024
05:20 pm

செய்தி முன்னோட்டம்

வீட்டில் தங்கியிருந்த பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா இருவருக்கும், நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அதோடு, அவர்கள் இருவரும், இரண்டு வாரங்களுக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா சார்பாக,"பெற்றோர் இல்லாமல் தங்களது 4 வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடப்பட்டது. இதற்கு, எதிர்தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

முன்கதை

பணிப்பெண்ணை அடித்து சித்ரவதை செய்த தம்பதி 

சில மாதங்களுக்கு முன்னர், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் தங்கி பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வீடியோ ஒன்று வைரலானது. அதனை தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் தலைமறைவாயினர். அவர்கள் இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பலவார தேடுதலுக்கு பிறகு, அவர்களை ஆந்திராவில் கைது செய்தனர் காவல்துறையினர். அதன்பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.