சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு; இது வரை 5 பாதிப்புகள் உறுதி
செய்தி முன்னோட்டம்
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இன்று காலை முதல் 4 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 2 குழந்தைகள், சென்னையில் 2 குழந்தைகள் மற்றும் குஜராத்தில் ஒரு குழந்தை என இன்று மட்டுமே 5 பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் 5 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது இந்த புதிய வைரஸ் அழுத்தம் அளிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஹியூமன் மெட்டாநியுமோ வைரஸ் (HMPV) எனப்படும் இந்த வைரஸ் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது மலேசியா, இந்தியாவிலும் அதன் பாதிப்புகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
embed
Twitter Post
#BREAKING | சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி அதிகளவில் குழந்தைகளை தாக்குமா? பதற்றப்படக் கூடிய தொற்றா? குடும்ப நல மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்#SunNews | #HMPvirus | #HMPVCase pic.twitter.com/LBjBnPeUdC— Sun News (@sunnewstamil) January 6, 2025
#BREAKING | சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி அதிகளவில் குழந்தைகளை தாக்குமா? பதற்றப்படக் கூடிய தொற்றா? குடும்ப நல மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்#SunNews | #HMPvirus | #HMPVCase pic.twitter.com/LBjBnPeUdC— Sun News (@sunnewstamil) January 6, 2025
எச்எம்பிவி
எச்எம்பிவி பின்னணி
எச்எம்பிவி, நெதர்லாந்தில் முதன்முதலில் 2001 இல் கண்டறியப்பட்டது. அடிக்கடி இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பொதுவான சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இருப்பினும், இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு கடுமையான சுவாச சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
எச்எம்பிவி புதியதல்ல என்றும் பீதியடையத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, ஐசிஎம்ஆர் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் வழக்கமான கண்காணிப்பை மேற்கோள் காட்டி, இந்தியாவில் காய்ச்சல் போன்ற அல்லது கடுமையான சுவாச நோய்களில் அசாதாரண அதிகரிப்பு எதுவும் இல்லை என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.