NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்
    2025 நிதியாண்டுக்கான வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்தார்

    நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் 2024 உரையின் முக்கிய அம்சங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 01, 2024
    02:15 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடி அரசின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    தனது பட்ஜெட் உரையில், ​​இந்தியாவின் பொருளாதாரம் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது என்றார்.

    ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டு, இந்தப் பகுதிகளில் அறிவிக்கப்படும் நலத்திட்டங்களுக்கான முன்னோட்டத்தை தந்தார்.

    நிர்மலா சீதாராமனின் 2024 இடைக்கால பட்ஜெட்டில் இருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

    வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 நிதியாண்டுக்கான வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார். அதேபோல,நேரடி வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் உள்ளிட்ட மறைமுக வரிகளுக்கு அதே வரி விகிதங்களைத் தக்கவைப்பதாகவும் அறிவித்தார்.

    இடைக்கால பட்ஜெட்

    இடைக்கால பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

    நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை: புதுப்பிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை மதிப்பீடு, இந்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 % உள்ளது எனவும், இது ஆரம்ப பட்ஜெட் மதிப்பீட்டை விட முன்னேற்றத்தைக் காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

    உள்கட்டமைப்பு திட்டங்கள்: உள்கட்டமைப்பில் அரசு முக்கிய கவனம் செலுத்தும். அடுத்த ஆண்டுக்கான செலவினம் 11.1% அதிகரித்து ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 3.4% இருக்கும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

    தரம் உயர்த்தப்படும் ரயில்வே:உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக போக்குவரத்து துறைக்கும் அறிவிப்புகள் வெளியாகின. 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் தரத்திற்கு உயர்த்தப்படும், விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

    இடைக்கால பட்ஜெட்

    'விக்சித் பாரத்' தொலைநோக்கு முதல் ஆயுஷ்மான் பாரத் விரிவாக்கம் வரை 

    'விக்சித் பாரத்' தொலைநோக்கு: "விக்சித் பாரத்-க்கான எங்களின் பார்வை, இயற்கையுடன் இணக்கமான செழிப்பான பாரதம், நவீன உள்கட்டமைப்புகள், அனைத்து குடிமக்கள் மற்றும் அனைத்து பிராந்தியங்களும் தங்கள் திறனை அடைய வாய்ப்புகளை வழங்குவதாகும்," என்று அவர் கூறினார். இதற்காக மாநில அரசுகளுக்கு 50 -ஆண்டுகள் வட்டியில்லா கடனாக ரூ.75,000 கோடி வழங்கவும் அவர் முன்மொழிந்தார்.

    ஆயுஷ்மான் பாரத் விரிவாக்கம்: அனைத்து ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் சுகாதார பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

    இடைக்கால பட்ஜெட்

    தனிக்கவனம் பெரும் நான்கு முக்கிய வகுப்புகள்

    ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது கவனம்: இந்தப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது என்றார் நிர்மலா சீதாராமன்.

    நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டுவசதி: தற்போது வாடகை வீடுகள், குடிசைப்பகுதிகள், குடிசைகள் அல்லது அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினரின் சொந்த வீடுகளை வாங்குவது அல்லது கட்டுவது என்ற அவர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது என தெரிவித்தார்.

    லட்சத்தீவில் பெரும் முதலீடு: இந்திய சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, லட்சத்தீவின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இடைக்கால பட்ஜெட் 2024
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    நிதியமைச்சர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இடைக்கால பட்ஜெட் 2024

    இடைக்கால பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்புகளை ஊட்டிவிட்டார் குடியரசு தலைவர்  பட்ஜெட்
    இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம்
    இடைக்கால பட்ஜெட் 2024: வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லை  நிர்மலா சீதாராமன்
    'அனைத்து துறைகளிலும் சமமாக வளர்ச்சியடைவதை இந்தியா குறிக்கோளாக கொண்டுள்ளது': நிர்மலா சீதாராமன்  நாடாளுமன்றம்

    நிர்மலா சீதாராமன்

    2023 பட்ஜெட் - உணவு தானியங்கள் இலவசமாக அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு பட்ஜெட் 2023
    யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன? பட்ஜெட் 2023
    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் மத்திய அரசு
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023

    நிர்மலா சீதாராமன்

    2023-24ம் ஆண்டிற்கான கல்வித்துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் 2023: மாநில தலைநகரங்களில் யூனிட்டி மால் அமைப்பதற்கான அறிவிப்பு பட்ஜெட் 2023
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    நிதியமைச்சர்

    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? உலக செய்திகள்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025