Page Loader
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு 
ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்

ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2024
04:53 pm

செய்தி முன்னோட்டம்

நிலமோசடி வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்-ஐ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்ததை அடுத்து, இன்று மாலை ஜார்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றார். இதன் மூலம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்டின் மாநிலத்தை அளவிற்கும் 13வது முதல்வராகிறார். ஹேமந்த் சோரன் பதவிர்க்கையில் உடன் அவருடைய தந்தையும், முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வருமான ஷிபு சோரன் உடன் இருந்தார். முதல்வர் ஹேமந்த் சோரன், நிலமோசடி வழக்கில் 5 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பாய் சோரன்

பதவி விலகிய சம்பாய் சோரன்

முன்னதாக கடந்த ஜனவரி மாத இறுதியில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரது பதவியை ராஜினாமா செய்தார். உடனே, பிப்ரவரி 2 ஆம் தேதி ஜார்க்கண்டின் 12வது முதலமைச்சராக பதவியேற்ற சம்பாய் சோரன், நேற்று மாலை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன், நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, ஜூன் 28 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை, மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அவரை சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் பலம் 45 எம்எல்ஏக்களாகக் குறைக்கப்பட்டது - ஜேஎம்எம்-27, காங்கிரஸ்-17 மற்றும் ஆர்ஜேடி-1. என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஹேமந்த் சோரன் பதவியேற்பு